இராஜராஜசோழனின் 1033 வது ஆண்டு சதயவிழா  

உலகப்புகழ்பெற்ற தஞ்சை பெரியகோவிலை எழுப்பிய மாமன்னன் இராஜராஜசோழனின் ஆயிரத்து 33 வது ஆண்டு சதயவிழா  இன்று தொடங்கியது.

தஞ்சை பெரியகோவில் என்றழைக்கப்படும் அருள்மிகு பெரியநாயகி அம்மன் உடனுறை ஸ்ரீபெருவுடையார் ஆலயம் உலகப்புகழ்பெற்ற பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக உள்ளது. இத்திருக்கோவிலை எழுப்பிய மன்னன் இராஜராஜசோழனின் பிறந்தநாளான ஐப்பசி சதய நாளில் இராஜராஜசோழனுக்கு ஆண்டுதோறும் அரசு விழா எடுப்பது வழக்கம். அதன்படி இந்தாண்டும் இவ்விழா இறைவணக்கத்துடன் டி.கே.எஸ்.பத்மநாபன் குழுவினரின் மங்கல இசையுடன் இன்று தொடங்கியது.

பின்னர் களிமேடு அப்பர் அவையினரின் தேவார திருமுறைஅரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இராஜஇராஜசோழனின் புகழினை பறைசாற்றும் வகையில் கருத்தரங்கம், கவியரங்கம், இன்னிசை பட்டிமன்றம், கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்டவை  நடைபெறுகிறது. நாளை நடைபெறும் நிகழ்ச்சியில், தமிழக அரசு சார்பில் இராஜராஜசோழனுக்கு மாலை அணிவித்தல், பெருவுடையாருக்கு அபிஷேகம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. சதயவிழாவினை முன்னிட்டு நாளை தஞ்சாவூர் மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

குஜராத் அருங்காட்சியகத்திலிருந்து மாமன்னன் ராஜராஜசோழன் சிலை மீட்கப்பட்டு நடைபெறும் முதல் சதயவிழா என்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts