இராமநாதபுரம் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதால் மக்கள் வேதனை

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை குஞ்சங்குளம் கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி அருகே காவேரி கூட்டு குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல மாதங்களாக குடிநீர் வீணாகிக் கொண்டிருப்பதாக கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மாவட்ட நிர்வாகம் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என  மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts