இராமநாதபுரம் மாவட்ட்த்தைச் சேர்ந்த தேர்தல் பணி ஊழியர்கள் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்

Want create site? Find Free WordPress Themes and plugins.

தமிழகத்தில்  வரும் 18 ம் தேதி மக்களவை தேர்தலையொட்டி மாவட்டங்களில் பணிபுரியும் காவலர்கள் தேர்தல் பாதுகாப்பு பணிக்கு செல்லவிருப்பதால் அவர்களுக்கு அந்தந்த மாவட்டங்களில் முன்கூட்டியே வாக்குப் பதிவு நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது. இதைத்தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்தில் பணிபுரியும் 150க்கும் மேற்பட்ட காவலர்கள் பாதுகாப்பு பணிக்கு செல்லவிருப்பதால் அவர்களுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

திருவாடானை  வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குசாவடியில்  காவலர்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர். மாலை 5 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.இதனையடுத்து சீல் வைக்கப்பட்ட  வாக்குப்பெட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டது. மே 23 ம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கையின் போது இந்த வாக்குகளும் சேர்த்து எண்ணப்படும்.

இதேபோல் வேலூர்  நேதாஜி அரங்கில் அமைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு மையத்தில்  தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர் வாக்குப்பதிவு செய்தனர்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts