இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மாரத்தான் ஓட்டம்

இந்தியாவிலேயே முதல்முறையாக இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் கலந்து கொண்ட மாரத்தான் ஓட்டம் வேலூரில் நடைபெற்றது.

வேலூர் கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உலக இருதய தினத்தை முன்னிட்டு நடைபெற்ற இந்த மராத்தான் ஓட்டமானது, பாகாயம் சி.எம்.சி மருத்துவமனை வளாகத்திலிருந்து பாலமதி வரையில் 21 கிலோமீட்டர் மலைப்பகுதியிலும் இந்த ஓட்டம் நடைபெற்றது. மாரடைப்பு ஏற்பட்டு அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், எல்லோரையும் போன்று ஓட முடியும், எல்லாவற்றையும் சாதிக்க முடியும் என்பதை நிரூபிக்கும் வகையில் இந்த மாரத்தான் நடத்தப்பட்டுள்ளது.

இந்த மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டார்கள். இருதய அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள் ஓய்வெடுக்க வேண்டும், எந்த வேலையும் செய்ய கூடாது, பளுதூக்க கூடாது, படியேற கூடாது என பயத்துடன் இருக்கும் நேரத்தில், அவர்களும் மற்றவர்களை போன்று பணிகளை செய்ய முடியும் என்பதை இந்த மாரத்தான் நிரூபித்துள்ளது.

 

Related Posts