இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு

திருப்பூரில் இரு சக்கர வாகனப் பந்தயத்தில் ஈடுபட்ட பத்தாம் வகுப்பு மாணவன் உயிரிழந்தான்.

திருப்பூர் பெரிய தோட்டம் பகுதியை சேர்ந்த முகமது பாஷித், தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறான். இவனும், அவனது நண்பனும் தனித்தனியே இருசக்கர வாகனத்தில் ரேஸில் ஈடுபட்டுள்ளனர். காங்கேயம் சாலையில் இருவரும் வெகு வேகமாக சென்று கொண்டிருந்தபோது, கோம்பை தோட்டம் பகுதியில் முகமது பாஷித் நிலைதடுமாறி சாலையில் விழுந்தார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பைக் ரேஸால் மகனை பறிகொடுத்த குடும்பம் வேதனையில் உள்ளது.

Related Posts