இரு தரப்பு மோதலை தடுக்கச் சென்ற காவலர்களுக்கு அரிவால் வெட்டு

திருச்சி மாவட்டம் முசிறி அருகே கோவில் திருவிழாவின் போது இரு தரப்பு மோதலை தடுக்கச் சென்ற காவலர்கள் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி : மே-12

திருச்சி மாவட்டம் முசிறியை அடுத்த சிவந்திலிங்கபுரம் என்ற இடத்தில் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவில் பங்கேற்ற இரு தரப்பினரிடையே திடீரென மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு பாதுகாப்புப் பணியில் இருந்த துறையூர் காவல் நிலைய காவலர்களான உமர் மற்றும் மோகன் ஆகியோர் மோதலைத் தடுக்கச் சென்றனர். அப்போது, மோதலில் ஈடுபட்டவர்கள் அரிவாளால் தாக்கியதில் உமர் மற்றும் மோகன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். தலையில் அரிவாள் வெட்டுப்பட்ட காவலர் மோகன் கவலைக்கிடமான நிலையில், திருச்சி கே.எம்.சி. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Posts