இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

வடதமிழகத்தில் அடுத்த இரு நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அந்த மையத்தின் இயக்குநர் புவியரசன், சென்னை நாகை இடையே 3 கிலோ மீட்டர் உயரத்தில் வளிமண்டலத்தில் காற்றுச் சங்கமம் நிலவுவதாகக் கூறினார். இதன் காரணமாக வடதமிழகம், புதுவை, காரைக்காலில் அடுத்த இரு நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று கூறிய அவர், ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் எனவும் கூறினார். ஜூன் 1 முதல் இன்று வரை தமிழகத்தில் 18 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், சென்னையில் இயல்பை விட 5 சென்டிமீட்டர் அதிகமாக மழை பெய்துள்ளதாகவும் புவியரசன் தெரிவித்தார்.

Related Posts