இரு மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை

சென்னை போரூரில் இரு மகன்களை விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தந்தையும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை : ஜூன்-26

சென்னை போரூர் காமதேனு நகரைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் என்பவரது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசவே சந்தேகம் அடைந்த அப்பகுதியினர், மதுரவாயல் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து அங்கு சென்ற காவல்துறையினர், வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது ஹபீப் ரஹ்மான், மற்றும் அவரது இரு மகன்களின் சடலம் அழுகிய நிலையில் கிடந்தது.

மகன்கள் இருவரையும் விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு, ரஹ்மான் தற்கொலை செய்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். ஹபீப் ரஹ்மானின் காதல் மனைவி அனீஷா இவரை விட்டுப் பிரிந்து இலங்கையில் இருப்பதாகவும், அண்மையில் அவர் சென்னை வந்த போது தங்களை பார்க்க வரவில்லை என்ற வேதனையில் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

Related Posts