இலக்கியத்திற்கான நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்படாது என அறிவிப்பு

 

 

இலக்கியத்தில் சிறந்து விளங்கும் நபர்களுக்கு ஆண்டுதோறும் அளிக்கப்பட்டு வரும் நோபல் பரிசு இந்த ஆண்டு வழங்கப்பட மாட்டாது என ஸ்வீடன் அகாடமி அறிவித்துள்ளது.

இலக்கியத்திற்கான நோபல் பரிசு ஆண்டுதோறும் இலக்கியத்தில் சிறந்து விளக்கும் நபர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த நபரை ஸ்வீடன் நாட்டின் இலக்கிய மன்றமான ஸ்வீடன் அகாடமி தேர்ந்தெடுத்து வருகிறது.  இந்நிலையில், ஸ்வீடன் அகாடமி  உறுப்பினர்கள் மீதான பாலியல் புகார்கள், நிதி மோசடிகள் காரணமாக இந்த ஆண்டு விருது வழங்குவதும், தேர்வு செய்யப்படுவதும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 75ஆண்டுகளில் முதல் முறையாக நோபல் பரிசு விருதுகள் அறிவிக்கப்படாமலும், தேர்வு செய்யப்படாமலும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்பது, குறிப்பிடத்தக்கது.

Related Posts