இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் 

இலங்கை தலைநகர்  கொழும்புவில்  கடந்த ஞாயிற்று கிழமை அன்று நிகழ்த்தப்பட்ட குண்டு வெடிப்பு தாக்குதல்களில் இதுவரை 359 பேர் உயிரிழந்து உள்ளனர்.  500 பேர் வரை காயமடைந்து உள்ளனர்.  காயமடைந்தவர்கள் வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 60 பேர் கைது செய்யப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில்,, இலங்கையில் அதிபர் சிறிசேன தலைமையில் இன்று காலை  அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில்,  குண்டு வெடிப்பு குறித்து அனைத்து கட்சி நிர்வாகிகள், மற்றும் தலைவர்களுடன் சிறிசேன ஆலோசனை நடத்த உள்ளார்.  அதனை தொடர்ந்து  மாலை 4 மணி அளவில் அதிபர் சிறிசேன தலைமையில் சர்வ சமய கூட்டம் நடைபெறவுள்ளது.

Related Posts