இலங்கையில் அதிரடிப்படையினர் நடத்திய சோதனையில், ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த 3 பேர் கைது 

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் குண்டு வெடிப்பில் தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள்தகர்க்கப்பட்டன. இந்த தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர்.  500-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.  தாக்குதல்கள் தொடர வாய்ப்புள்ளது என்றும், ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாகவும் கிடைத்த தகவலை தொடர்ந்து, அங்கு வாகன சோதனை, தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. நேற்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டறியப்பட்டது. இந்நிலையில், இலங்கையின் கொழும்பு கடற்கரை முகத்துவாரம் பகுதியில் அதிரடிப்படையினர் இன்று சோதனை நடத்தினர். அப்போது,  ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 21 கையெறி குண்டுகள் மற்றும் 6 வாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல், இலங்கையின் நுவரெலியா நகரில் நடந்த சோதனையில் 200 டெட்டனேட்டர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

 

Related Posts