இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை

இலங்கையில் இருந்து கள்ளத்தோணியில் தனுஷ்கோடி வந்த இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு பயங்கரவாதிகள் ஊடுருவி இருப்பதாக உளவுத்துறை தகவல் கொடுத்தது. இதையடுத்து மாநிலம் முழுவதும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தனுஷ்கோடி அருகில் உள்ள அரிச்சல்முனை பகுதியில் 24 வயது மதிக்கத்தக்க வாலிபர் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றி திரிவதாக அந்த பகுதி மீனவர்கள், கியூ பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவர்கள், அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில்  இலங்கை வவுனியா மாகாணம் செட்டிக்குளத்தைச் சேர்ந்த முருகையா மகன் அருண்ராஜ் என்பது தெரியவந்தது.

Related Posts