இலங்கையில் கலவரத்தை தடுக்க 4 நகரங்களில் ஊரடங்கு சட்டம் அமல்

Want create site? Find Free WordPress Themes and plugins.

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று தேவாலயங்கள் மற்றும் பிரபல நட்சத்திர விடுதிகளின் மீது தற்கொலப்படை பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 253 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்ற தேசிய தவ்ஹீத் ஜமாத் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த பலர் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைப்பட்டுள்ளனர். தொடர் குண்டு வெடிப்புகளால் ஏற்பட்ட அதிர்ச்சியில் இருந்து  இலங்கை மக்கள் தற்போது இயல்புநிலைக்கு திரும்பி வருகின்றனர்.  இந்நிலையில், சமூக வலைத்தளத்தில் வெளியான ஒரு விரும்பத்தகாத பதிவை மையமாக வைத்து அந்நாட்டின் மேற்கு பகுதியில் உள்ள கடலோர நகரமான சிலாபம் நகரில் நேற்று முன்தினம் இருதரப்பினருக்கு இடையில்  கலவரம் வெடித்தது. இதையடுத்து  இன்று காலை6 மணிவரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  அசம்பாவித சம்பவங்களை தவிர்க்கவும் தடுக்கவும் அங்கு கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தேவையற்ற வதந்திகள் பரவாமல் இருக்க சமூக வலைத்தளங்களும் முடக்கி வைக்கப்பட்டன. இந்நிலையில், இன்று பிற்பகல் ஹெட்டிபொல பகுதியில் இருபிரிவினருக்கு இடையில் மீண்டும் மோதல் வெடித்தது. இதைதொடர்ந்து, குளியாப்பிட்டி, பிங்கிரிய, தும்மலசூரிய மற்றும் ஹெட்டிபொல ஆகிய பகுதிகளில் உடனடியாக அமுலாகும் வகையில் காவல்துறை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. இந்தஊரடங்கு சட்டம்  நாளை அதிகாலை 4 மணி வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts