இலங்கையில் குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் கைது-ரனில் விக்ரமசிங்கே

 

 

இலங்கையில் கடந்த ஏப்ரல் 21ந்தேதி ஈஸ்டர் பண்டிகையன்று தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.  இந்த குண்டுவெடிப்புகளில் 258 பேர் பலியாகினர்.  500-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்

இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றது.  ஆனால் இதற்கு உள்நாட்டு பயங்கரவாத அமைப்பான தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியது.

 

இந்த நிலையில், இலங்கையின் தெற்கே கல்லி நகரில் கூட்டமொன்றில் பேசிய அந்நாட்டு பிரதமர் ரனில் விக்ரமசிங்கே, இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் குற்றச்சாட்டு கூறப்பட்ட அனைத்து பயங்கரவாதிகளும் கைது செய்யப்பட்டு விட்டனர் என்று தெரிவித்தார்.

Related Posts