இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம்: அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை

இலங்கையில் கடந்த மாதம் ஈஸ்டர் தினத்தன்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 260 பேர் உயிரிழந்தனர். . இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். பயங்கரவாதிகளும், தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கரவாதிகளும் பொறுப்பேற்றுள்ளனர். இதற்கிடையே கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மீண்டும் தற்கொலை தாக்குதல் நடத்த தேசிய தவ்ஹீத் ஜமாத் பயங்கர வாதிகள் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் அந்த திட்டத்தை இலங்கை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர்.

இதனிடையே அம்பாறை மாவட்டத்தில் 3 தற்கொலை படை பயங்கரவாதிகள் சுற்றி வளைத்து கொல்லப்பட்டனர். என்றாலும் இலங்கைக்கு இன்னமும் பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் இலங்கையில் மீண்டும் தாக்குதல் நடத்தப்படலாம் என்று அமெரிக்க உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  கொழும்பில் தனது தூதரகம் மூலம் இந்த எச்சரிக்கையை இலங்கைக்கு அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதையடுத்து இலங்கையில் கண்காணிப்பு மற்றும் வாகனச் சோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது

Related Posts