இலங்கையுடனான 2வது டெஸ்ட் இந்திய அணி வீரர்கள் செய்த சாதனை தெரியுமா?

இலங்கையுடனான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வீரர்களின் சாதனை விபரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்தியா-இலங்கை இடையே 2வது டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இதில் இலங்கை அணியின் முதல் இன்னிங்சின் போது அஸ்வின் 4 விக்கெட்டுகளும், ஜடேஜா மற்றும் இஷாந்த் சர்மா தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் அஸ்வின் – ஜடேஜா இணை டெஸ்டில் 300வது விக்கெட்டுகள் மேல் வீழ்த்தி சாதனை படைத்தது. இருவரும் இணைந்து 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 304 விக்கெட் வீழ்த்தியுள்ளனர். இதில் அஸ்வின் 163 விக்கெட்டுகளும், ஜடேஜா 141 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.

31 வயதான சென்னையை சேர்ந்த அஸ்வின் 54 டெஸ்டில் விளையாடி 300 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இதன்மூலம், குறைந்த டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 300 விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை அஸ்வின் படைத்தார். தவிர,  டெஸ்டில் தொடர்ச்சியாக 3 வருடங்கள் 50 விக்கெட்டுகள் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின்.

Related Posts