இலங்கை கல்முனை பகுதியில் நடைபெற்ற துப்பாக்கிச்சண்டையில் 15 பேரின் சடலங்கள் மீட்பு

கடந்த 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது  இலங்கையில் தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதற்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்ற போதிலும், தேசிய தவ்ஹீத் ஜமாஅத் மீது இலங்கை அரசு குற்றம் சாட்டியுள்ளது.  குண்டு வெடிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் தொடர் சோதனைகளை இலங்கை பாதுகாப்பு படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.   இந்நிலையில்,  கல்முனை – சாய்ந்தமருதுப் பகுதியில் நேற்று இரவு நடைபெற்ற தாக்குதல் சம்பவத்தில் இதுவரை 15 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.  இதில்,  6 ஆண்கள், 3 பெண்கள், 6 சிறுவர்களுடையசடலங்கள் என காவல்துறை செய்தி தொடர்பாளர் ஒருவர் தெரிவித்து உள்ளார்.  இந்த சம்பவத்தில் காயமடைந்துள்ள பெண் ஒருவரும் சிறார் ஒருவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவர்  தெரிவித்துள்ளார்.  அதேவேளையில், இந்த சம்பவத்தில் பாதுகாப்புத் தரப்பினருக்கு உயிர்ச்சேதம்ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts