இலங்கை குண்டுவெடிப்புகள் தொடர்பாக தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் குண்டுவெடிப்பில் உயிரிழந்தார் 

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தின்போது, மூன்று கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் மூன்று 5 நட்சத்திரஉணவு விடுதிகள் மீது திடீரென வெடிகுண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இதில் 359 பேர் உயிரிழந்தனர். 500- க்கும் மேற்பட்டோர்  காயமடைந்தனர்,.  இந்த சம்பவத்தை நிகழ்த்திய 9 பேரின் புகைப்படங்களை காவல்துறை வெளியிட்டது. இதில் 3 பெண்கள் இடம் பெற்றுள்ளனர். இந்நிலையில் வெடிகுண்டு தாக்குதல் குறித்து இன்றுவிளக்கம் அளித்த இலங்கை அதிபர் மைத்திரிபால,  இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம், நட்சத்திர விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்ததாக தெரிவித்தார். இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன் தொடர்புடைய 140க்கும் மேற்பட்டோர் உள்ளனர் எனவும், அதில். தற்போது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சிறிசேன குறிப்பிட்டார்.

Related Posts