இலங்கை குண்டு வெடிப்பு தொடர்பாக வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது 

இலங்கையின் கொழும்பு நகரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்ட  தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில்  359 பேர் உயிரிழந்தனர்.  500 பேர் காயமடைந்தனர்.  இந்த சம்பவத்தை நிகழ்த்திய 3 பெண்கள் உள்பட 9 பயங்கரவாதிகளின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன. . குண்டுவெடிப்பு தொடர்பாக இதுவரை 75 பேரை கைது செய்யப்பட்டுள்ளனர்.கொழும்பு நகரம் முழு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள  நிலையில், குண்டுவெடிப்பு சம்பவத்தில் தொடர்பிருப்பதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் இலங்கை வர்த்தக அமைச்சர் ரிஷாத் பத்யுதீனின் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் விசாரணை நடப்பதாக அதிர்ச்சி  தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் கைது செய்யப்படவில்லை என அமைச்சர்  ரிஷாத் மறுப்பும் தெரிவித்துள்ளார்.  தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து இலங்கையின் பல பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நடத்தலாம் என்ற பீதி நிலவுகிறது. இந்நிலையில் இன்று  செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் மைத்திரிபால சிறிசேன, இலங்கை அரசால் தேடப்பட்டு வந்த மதகுரு ஹஸிம் நட்சத்திர விடுதியில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்த்தாக தெரிவித்தார். . இலங்கையில் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்புடன்  தொடர்புடைய 140க்கும் மேற்பட்டோர் உள்ளனர் எனவும், தற்போது 70 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாதிகளின்  நடவடிக்கைகள் எதுவாக இருந்தாலும் அதை கட்டுப்படுத்தும் திறன் அரசுக்கு உண்டு’ என குறிப்பிட்ட அவர், . இலங்கையில் சிறுபான்மை இனத்தவராக வாழும் முஸ்லிம் மக்களை பயங்கரவாதிகள் போல் பார்க்காமல்,  அவர்களை பாதுகாக்க வேண்டும் என  வலியுறுத்தினார்.

Related Posts