இலங்கை சிறையில் உள்ள 8 தமிழக மீனவர்கள் விடுதலை

 

 

தமிழ் புத்தாண்டையொட்டி இலங்கை சிறையில் உள்ள மேலும் 8 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

ஏப்ரல்-10

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 27 பேர், அண்மையில் விடுவிக்கப்பட்டனர். அவர்கள் நாளை தாயகம் திரும்புகின்றனர். இந்நிலையில், தமிழ்ப் புத்தாண்டையொட்டி, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் 8 பேரை விடுதலை செய்து, அந்நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவர்கள் அனைவரும் விரைவில் தாயகம் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts