இலங்கை தலைநகர் கொழும்புவில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டுப்பிடிப்பு

கொழும்புவில்  கடந்த ஞாயிறன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து 8இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் இதுவரை 45சிறுவர்கள் உட்பட 359 பேர் உயிரிழந்துள்ளனர். மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வரும் பலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த கொடூர தாக்குதலுக்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். பொறுப்பேற்றுள்ளது. இலங்கையில் இயல்பு நிலை வந்த நிலையில் இன்று காலை கொழுப்புவின் வெள்ளவத்தை பகுதியில் உள்ள சவாரி திரையரங்கு அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகத்தில் வெடிகுண்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வெடிகுண்டு நிபுணர்கள் அதனை அப்புறப்படுத்தி செயலிழக்கச் செய்தனர். தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதியில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டுள்ளதை அடுத்து  அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இலங்கை குண்டுவெடிப்புக்கு பாதுகாப்பு குறைபாடே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், முப்படைத் தளபதிகளை 24 மணி நேரத்தில் மாற்றப் போவதாக அந்நாட்டு அதிபர் சிறிசேனா அறிவித்துள்ளார்

Related Posts