இலங்கை தாக்குதலில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் 

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில்  தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகள் தகர்க்கப்பட்டன.  இந்த தாக்குதலில். பிரார்த்தனைக்காக தேவாலயங்களில் திரண்டிருந்த பொதுமக்களில் 359 பேர் பரிதாபமாக  உயிரிழந்தனர்.  500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில்,  ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாகவும், இதனால் தாக்குதல் தொடர வாய்ப்பு உள்ளதாகவும்,  பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். இதையடுத்து இலங்கையில் வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை நடத்தப்பட்ட வாகன சோதனையில் மேலும் ஒரு வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டதை அடுத்து இலங்கையில் பதற்றம் அதிகரித்துள்ளது. .  இது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவான் விஜயவர்த்தனேகூறுகையில், தலைநகர் கொழும்புவில் உள்ள சவாய் திரையரங்கு அருகே இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டதாகவும்,  பயங்கரவாத கும்பல் இரண்டு குழுக்களாக பிரிந்து செயல்படுவதாக தெரிய வந்துள்ளதாகவும் கூறினார். . இதில்,ஒரு குழுவின் தலைவர் மனித வெடிகுண்டாக மாறி உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது எனவும்,இந்த தாக்குதல்களில் ஈடுபட்ட 9 தற்கொலை பயங்கரவாதிகளுள் ஒருவர் பெண் என தெரிய வந்துள்ளதாகவும் அமைச்சர் ருவான் விஜயவர்த்தனே  தெரிவித்தார்.

Related Posts