இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை: சிறீசேனா

இலங்கை பிரதமராக ரனில் விக்ரமசிங்கேயை மீண்டும் நியமிக்கும் பேச்சுக்கே இடமில்லை  என்று அதிபர் சிறீசேனா திட்டவட்டமாக கூறியுள்ளார். இலங்கை அதிபர் சிறீசேனா கடந்த மாதம் அதிரடியாக பிரதமர் விக்ரமசிங்கேயை நீக்கிவிட்டு, ராஜபக்சேவை பிரதமராக்கினார். இந்த நடவடிக்கை இலங்கை அரசியலில்குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்ரமசிங்கே, ராஜபக்சே இருவரும் தாங்கள் தான் பிரதமர் என்று கூறி வருகின்றனர்.இந்நிலையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தஅதிபர் சிறிசேனா,  மீண்டும் பிரதமராக விக்ரமசிங்கேவை நியமிப்பதற்கு வாய்ப்பே இல்லை எனவும்,. தனது முடிவால் அமைதியற்ற சூழல் உருவாகி இருந்தாலும், அதை தீவிர அரசியல் நெருக்கடியாக கருதவில்லை எனவும் தெரிவித்தார்.அரசு நிர்வாகத்தில் பல தீவிரமான கொள்கை மாறுபாடுகளை விக்ரமசிங்கே கடைபிடித்தார் என கூறிய சிறீசேனா அறிவியல் அடிப்படையில் உயரதிகாரிகளை நியமிக்க கல்வியாளர்கள் கொண்ட  குழுவை நியமித்ததாகவும் ஆனால் விக்ரமசிங்கே அதனைநிராகரித்துவிட்டதாகவும் தெரிவித்தார்., மத்திய வங்கி ஆளுநராக சிங்கப்பூர் நாட்டை சேர்ந்த அர்ஜூனா மகேந்திரன் என்பவரை விக்கிரமசிங்கே  நியமித்தார் எனவும்,அவரை அந்த பதவிக்கு நியமிக்கக் கூடாது என்று கூறியும், அதனை நிராகரித்துவிட்டு அவரையே வங்கி ஆளுநராக விக்கிரமசிங்கே நியமித்தார் எனவும் அவர் தெரிவித்தார்.மத்திய வங்கி பத்திரங்கள் வெளியிட்டதில் மிகப்பெரிய நிதி முறைகேடு நடைபெற்றதற்கு மகேந்திரனே பொறுப்பு என்ற சிறீ சேனா, விக்ரமசிங்கேவின் 3 ஆண்டு ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Related Posts