இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.


இலங்கை பிரதமர் பதவியில் இருந்து மகிந்த ராஜபக்சே ராஜினாமா செய்துள்ளார்.

இலங்கையில் பிரதமராக இருந்த ரனில் விக்ரமசிங்கேவை கடந்த அக்டோபர் மாதம் 26-ந் தேதி நீக்கிய அதிபர் சிறிசேனா, முன்னாள் அதிபர் ராஜபக்சேவை புதிய பிரதமராக நியமித்தார். இது அரசியல் நெருக்கடிக்கு வழி வகுத்ததால் நாடாளுமன்றத்தை கலைத்து வரும் ஜனவரி மாதம் 5-ந் தேதி தேர்தல் நடத்த சிறிசேனா அறிவிப்பு வெளியிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அந்நாட்டு உச்சநீதிமன்றம் சிறிசேனாவின் உத்தரவை அதிரடியாக ரத்து செய்து நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது.  இதைத்தொடர்ந்து அதிபர் சிறிசேனா தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முன்னாள் அதிபர் ராஜபக்சே உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் பேசிய சிறிசேனா, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதையடுத்து, ,  இலங்கை பிரதமர் பதவியில் இருந்து  மகிந்த ராஜபக்சே விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தை இலங்கை அதிபர் சிறிசேனாவுக்கு ராஜபக்சே அனுப்பி வைத்துள்ளார்.இதனை தொடர்ந்து ரனில் விக்கிரம சிங்கே நாளை பிரதமராக பதவியேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Related Posts