இலங்கை வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 359 ஆக உயர்வு

இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த ஞாயிறு அன்று தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில், பயங்கரவாதிகள் நிகழ்த்திய தொடர் வெடிகுண்டு தாக்குதலில் பொதுமக்கள் கொத்துக் கொத்தாக உயிரிழந்தனர். 500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். அவர்கள்  வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்த்தால், நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் உயிரிழந்ததாகஅறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர். இன்று காலை நிலவரப்படி உயிரிழந்தோர் எண்ணிக்கை  359ஆக உயர்ந்துள்ளது. இதில் 45 குழந்தைகள், 35 வெளிநாட்டவர்கள் அடங்குவர். 500க்கும் மேற்பட்டோர், படுகாயங்களுடன் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்..ஈவு இரக்கமின்றி பொதுமக்களை கொன்று குவித்த, இந்த கொடூர தாக்குதலுக்கு ஐஎஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இந்த தாக்குதல் தொடர்பாக 40 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில்,நேற்று இரவு மேலும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இலங்கையில் மேலும் பலர் பதுங்கியிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கே எச்சரித்துள்ளார். எனவே, வாகன சோதனை மற்றும் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts