இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா புதிய உலக சாதனை

நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

இலங்கை நியூசிலாந்து அணிகள் மோதிய 3-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி இலங்கையின் பல்லேகெலேயில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங்கை தொடங்கிய இலங்கை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 125 ரன்கள் சேர்த்தது.

இதையடுத்து 126 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது.

இந்தநிலையில் மலிங்கா வீசிய 3-வது ஓவரில் நியூசிலாந்து அணியின் கொலின் முன்றோ, ரூதர்போர்டு, கிராண்ட்ஹோம் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பின்னர் மலிங்கா வீசிய 4-வது பந்திலும் ராஸ் டெய்லரும் எல்பிடபிள்யூ ஆக 4 பந்துகளுக்கு 4 விக்கெட் எடுத்து புதிய உலக சாதனையை படைத்தார்.

Related Posts