“இல்லந்தோறும் இணையம்” திட்டம் : 1,815 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும்

110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்த இல்லந்தோறும் இணையம் என்ற திட்டம், 1,815 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்தப்படும் என்று வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னையில் அண்ணா சாலையில் உள்ள மின் ஆளுமை அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் ஆய்வுகூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், சட்டமன்றத்தில் 110 விதியின் கீழ்  அறிவித்த இல்லந்தோறும் இணையம் என்ற திட்டத்தின் மூலம், அனைத்து நகரம், மற்றும் கிராம பஞ்சாயத்துகளிலும் அதிவேக இணைய சேவை வழங்கப்படும் என்றார்.

இதற்கு முன்பாக செய்தியாளர்கள் சந்தித்த தகவல் தொழில்நுட்ப துறை செயலாளர் சந்தோஷ் பாபு, மத்திய அரசு பாரத் நெட் என்ற திட்டத்தின் மூலம் பஞ்சாயத்து தோறும் இணைய சேவையை வழங்க திட்டமிட்டுள்ளது என்றார். நாட்டிலேயே பி.எஸ்.என்.எல்.லுக்குப் பிறகு அரசு இணைய சேவை வழங்கும் உரிமை தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்திற்கு மட்டும் தான் உள்ளது என்று அவர் கூறினார். இந்த நிறுவனத்தின் மூலம் இணைய சேவை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்,

Related Posts