இளவேனில் காலம் விடைபெற்று, முதுவேனில் தொடங்குவதன் அடையாளம் தான் சித்திரை முதல் நாள்: வைகோ வாழ்த்து

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திலும், அனைத்து இந்திய அளவிலும் ஒரு பெரிய மாற்றத்திற்கு கட்டியம் கூறுகின்ற வகையில் இந்த ஆண்டு சித்திரைத் திங்கள் மலர்வதாக தெரிவித்துள்ளார்

காவிரி பிரச்சினையில் உச்சநீதிமன்றத்தின் வஞ்சகத் தீர்ப்பு, மேற்குத் தொடர்ச்சி மலைகளை உடைத்து நொறுக்கும் நியூட்ரினோ எனும் நாசகாரத் திட்டம், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், ஷேல் கேஸ் எனும் பேரழிவுத் திட்டங்களைச் செயல்படுத்தி, காவிரி வேளாண் மண்டலத்தை பெட்ரோலிய மண்டலமாக மாற்றி, தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கத் திட்டம் வகுத்த மத்திய அரசின் கேடுகள் அனைத்தையும் எதிர்த்துப் போராடும் வலிமையைப் பெற்றுள்ள தமிழகம், நடைபெற இருக்கின்ற 17 ஆவது நாடாளுமன்றத் தேர்தல் களத்தில் ஆட்சியாளர்களுக்குப் பாடம் புகட்டுகின்ற வகையில் நல்ல தீர்ப்பு அளிக்கும் என தெரிவித்துள்ளார்

தமிழ் மண்ணுக்குப் புதுப் பொலிவு ஊட்டிடக் கடமை ஆற்றுவோம் எனவும்  களத்தில் வெற்றியும் காண்போம் என தெரிவித்துள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தரணி எங்கணும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை முதல்நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மகிழ்ச்சி அடைவதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Posts