இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நேட்டன்யாஹூ வெற்றி

120 இடங்களைக் கொண்ட இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது.  நாடு முழுவதும் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிகளில் மக்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வாக்களித்தனர். இதனால் வாக்குப் பதிவு  விறுவிறுப்பாக நடைபெற்றது.  வாக்குப் பதிவு நிறைவடைந்ததும் பதிவான வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்டன. இதில், தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நேட்டயன்யாஹூவின்  கட்சி பெரும்பாலான இடங்களில் வெற்றியை பதிவு செய்துள்ளது. 96 சதவீத வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், பெஞ்சமின் நேட்டன்யாஹூவின்  லிகுட் கட்சி 37 இடங்களை கைப்பற்றியதாக உள்ளூர் தொலைக்காட்சிகளில் செய்தி வெளியாகியுள்ளது.  மையவாத நீல வெள்ளை கூட்டணியின் தலைவரான ஓய்வுபெற்ற ஜெனரல் பென்னி கான்ட்ஸ் கட்சி 36 இடங்களில் வென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. . வலதுசாரி அமைப்புகள் ஆதரவுடன் கூட்டணி அரசை அமைக்க  பெஞ்சமின் நேட்டன்யாஹூ திட்டமிட்டுள்ளார்.இதன் மூலம், பெஞ்சமின் நேட்டன்யாஹூ 5-வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.  கடந்த 13 ஆண்டுகளாக பிரதமர் பதவியில் பெஞ்சமின் நேட்டன்யாஹூவே நீடித்து வருவதுகுறிப்பிடத்தக்கது.

Related Posts