இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 2 பாலஸ்தீனர்கள் பலி

காஸா எல்லைப்பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனத்தை சேர்ந்த இரண்டு பேர் உயிரிழந்தனர்.

காஸா : ஜூன்-30

இஸ்ரேல் அரசால் பறிக்கப்பட்ட தங்கள் நிலங்களை மீண்டும் வழங்கக் கோரி, காஸா எல்லைப்பகுதியில் கடந்த இரண்டு மாதங்களாக பாலஸ்தீன மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,காசா எல்லையோரத்தில் தடுப்பு வேலியின் அருகே திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் மீது இஸ்ரேல் ராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 14 வயது சிறுவன் உட்பட இரண்டு பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர். மேலும் சுமார் 415 பேர் காயமடைந்துள்ளதாக காஸா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால், அப்பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

Related Posts