ஈராக் நாடாளுமன்ற தேர்தல்: மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பு

 

 

ஈராக் நாடாளுமன்றத்துக்கு 329 புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தீவிரவாதிகளின் ஆதிக்கத்தில் சிக்கியிருந்த ஈராக்கிலிருந்து, அமெரிக்க பாதுகாப்புப்படை வாபஸ் பெறப்பட்ட மூன்றாண்டுகளுக்கு பின்னர் கடந்த 2014-ம் ஆண்டில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நிகழ்ந்ததாக புகார்கள் எழுந்தன. இந்நிலையில், 329 இடங்களை கொண்ட ஈராக் நாடாளுமன்ற தேர்தல் இன்று நடைபெற்றது. 18 மாகாணங்களுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற இந்த தேர்தலில் சுமார் 7 ஆயிரம் வேட்பாளர்கள் போட்டியிட்டனர். அனைத்து வாக்குச்சாவடிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆண்களும் பெண்களும் நீண்ட வரிசையில் ஆர்வத்துடன் காத்திருந்து வாக்களித்தனர். இந்த தேர்தலில், ஈராக் பிரதமர் ஹைதர் அல் அபாடி மற்றும் முன்னாள் பிரதமர் நூரி அல்-மாலிக்கி இடையில் பலத்த போட்டி நிலவுகிறது.

Related Posts