ஈரானில் இருந்து  கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அமெரிக்கா அனுமதியளிக்க வேண்டும்:  சுஷ்மா சுவராஜ் 

அமெரிக்காவிற்கும், ஈரானுக்கும் இடையிலான அணுஆயுத ஒப்பந்தம் முடிந்ததன் விளைவாக ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா தடை விதித்தது.

இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு மட்டும் கால அவகாசம் வழங்கப்பட்டது. கால அவகாசம் முடிவடையும் நிலையில், கச்சா எண்ணெய் தட்டுப்பாட்டை தடுக்க மத்திய அரசு மாற்று நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் அமெரிக்க அரசு செயலர் மைக் பாம்பியாவுடன் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார். அப்போது ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்ய அனுமதியளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகவும், அதற்கு அமெரிக்கா எந்தவித முடிவும் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.

Related Posts