ஈரானில் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஏவுகணை

முழுவதும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவான ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை ஈரான் காட்சிப்படுத்தியுள்ளது.

உள்நாட்டு ஆயுத உற்பத்தியை அதிகரித்து தனது ஆயுத திறன்களை விரிவுபடுத்தி வரும் ஈரான், நாட்டின் தேசிய பாதுகாப்பு தொழில் நாளில் இந்த புதிய ஏவுகணை எதிர்ப்பாயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் எஸ்-300 ரக ஏவுகணை அமைப்பை விட, ஈரான் உருவாக்கியுள்ள பாவர் – 373 சக்தி வாய்ந்தது என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த எதிர்ப்பாயுதம் சுமார் 300 கிலோ மீட்டருக்கு அப்பால் வரும் எதிரிநாட்டு ஏவுகணைகளையும், விமானங்களையும் குறிவைத்து, தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது என அந்நாட்டு பாதுகாப்புத்துறை அமைச்சர் அமிர் ஹடாமி ((Amir Hatami)) தெரிவித்துள்ளார்.

முழுக்க முழுக்க உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ஆயுதம் விரும்பும் இடத்துக்கு நகர்த்திக் கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஈரான் வான்பறப்பில் பறந்த அமெரிக்க ஆளில்லா உளவு விமானத்தை இதே ரக எதிர்ப்பாயுதம் மூலம் ஈரான் சுட்டு வீழ்த்தியது. அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே மோதல் போக்கு நிலவி வரும் சூழலில் ஈரான் புதிய ஏவுகணை எதிர்ப்பு ஆயுதத்தை காட்சிப்படுத்தியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts