ஈரான் அணு ஆயுத உற்பத்தியை தொடங்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்

ஈரான் மீண்டும் அணு ஆயுத உற்பத்தியை தொடங்கினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

அமெரிக்கா : மே-10

ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தில் குறைகள் இருப்பதாகக் கூறி அதில் இருந்து விலகுவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி, யுரேனியம் செறிவூட்டல் பணியை தொடங்கப் போவதாகக் கூறி இருந்தார். இதுகுறித்து பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அணு ஆயுத உற்பத்தி திட்டத்தை மீண்டும் தொடங்கக் கூடாது என ஈரானை கடுமையாக வற்புறுத்திக் கேட்டுக் கொள்வதாக தெரிவித்துள்ளார். ஒருவேளை அணு ஆயுத திட்டங்களை தொடங்கினால், ஈரான் கடும் பின் விளைவுகளை எதிர்காலத்தில் சந்திக்கும் என்று எச்சரித்துள்ளார்.

Related Posts