ஈரோடு அருகே கிட்னி கேர் மருத்துவமனை பெயரில் மோசடி செய்த நைஜீரியாவை சேர்ந்தவர்கள் கைது

ஈரோட்டில், கல்யாணி கிட்னிகேர் மருத்துவமனை உள்ளது. இதன் பெயரில் சில மாதங்களுக்கு முன்பு, முகநூலில் போலி கணக்கு துவங்கிய மர்மநபர்கள்  தங்களிடம் கிட்னி விற்பனை செய்தால், ஒரு கோடி ரூபாய் பணம் கிடைக்கும், என விளம்பரம் செய்தனர்.

  இதற்கு முன்பதிவு கட்டணம் செலுத்த வேண்டும் என்று அறிவித்து, தமிழகம் உள்பட, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த, 500க்கும் மேற்பட்டோரிடம், பல கோடி ரூபாய் வசூலித்துள்ளனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகம் சார்பில் ஈரோடு காவல் கண்காணிப்பாளர் சக்தி கணேசனிடம் புகார் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் முகநூல் கணக்கு முடக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது,அப்போது நைஜீரியா நாட்டை சேர்ந்த, ஓகோவா ஸ்டீபன், , கொலின் ஸ்டேன்டிஆகியோருக்கு இந்த மோசடியில் தொடர்ப்பு இருப்பது தெரியவந்தது .இதையடுத்து    கர்நாடகா மாநிலம், பெங்களூரில்பதுங்கியிருந்த இருவரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். பிசினஸ் விசாவில் வந்த இருவரும் கடந்தமூன்று ஆண்டுகளாக, பெங்களூருவில் தங்கி இருந்தது காவல்துறையினரின் முதற்கட்ட விசாராணையில் தெரியவந்தது. மேலும் அவர்களிடமிருந்து டொயோட்டா கொர்லா கார் மற்றும் இருசக்கர வாகனத்தை  பறிமுதல் செய்த காவல்துறையினர் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Posts