ஈரோடு அருகே டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி

ஈரோடு அருகே டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் நகராட்சிக்குட்பட்ட மொடச்சூர் பகுதியில் டெங்கு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதனை நகராட்சி ஆணையாளர் தாணுமூர்த்தி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அதைத்தொடர்ந்து 5 குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு மொடச்சூர் பகுதிகளில் உள்ள வீடுகளுக்குசென்று சென்று அங்கு தண்ணீர் தேங்கியுள்ளதா வீட்டினுள் வைத்திருக்கும் குளர்சாதப்பெட்டியில் கசிவு நீர் தேங்கியுள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர். மேலும் வீட்டு உரிமையாளர்களிடம் டெங்கு கொசுகள் பரவுவதை தடுக்கக்கும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர்.

Related Posts