ஈரோடு மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி ஈரோடு வ.உ.சி பூங்காவில் வாக்கு சேகரித்தார்

திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளர் கணேசமூர்த்தி  ஈரோடு பேருந்து நிலையம் அருகே உள்ள வ.உ.சி பூங்காவில் இன்று அதிகாலை நடைபயிற்சியில் ஈடுபட்டபொதுமக்களிடம் வாக்கு கேட்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.  அவருடன் தெற்கு மாவட்ட திமுக துணை செயலாளர் செந்தில்குமார்  தெற்கு மாவட்ட திமுக பொருளாளர் ப.க. பழனிசாமி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.

Related Posts