ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழை காரணமாக 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவாழை மரங்கள் சேதமடைந்தன

அக்னி நட்சத்திரம் தொடங்கியது முதல் தமிழகத்தில் வெயில் சுட்டெரித்து வந்தது. இந்நிலையில், வெப்பச் சலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மதுரை மாநகர் முழுவதும் நேற்று இடியுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்தது. பலத்த காற்று காரணமாக தமுக்கம் மைதானத்தில் நடந்து வரும் அரசு சித்திரைப் பொருட்காட்சியும் வைக்கப்பட்டிருந்த ராட்சத பேனர்கள் சரிந்து  விழுந்தன. பல இடங்களில் மரங்களும், மின்கம்பங்களும் சாய்ந்ததால் போக்குவரத்து மற்றும் மின் விநியோகம் பாதிக்கப்பட்டது.  இதேபோல் ஈரோடு மாவட்டத்தில் சூறாவளிக் காற்றுடன் பெய்த மழை காரணமாக அய்யம்புதூர் சின்னகொரவம்பாளையம்  உள்ளிட்ட பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்டிருந்த 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தன. சூறாவளியால் சேதமடைந்த வாழை மரங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், பயிர் காப்பீட்டுத் திட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனவும்  அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts