ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக மிரட்டல் : போலீசார் தீவிர சோதனை

ஈரோடு ரயில் நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக வந்த மிரட்டலை அடுத்து போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

ஈரோடு, அரக்கோணம், ஜோலார்பேட்டை உள்ளிட்ட ரயில் நிலையங்களில் வெடிகுண்டு வெடிக்கும் என சேலம் கோட்ட ரயில்வே மேலாளருக்கு மிரட்டல் கடிதம் வந்தது. இதனையடுத்து அவர் அளித்த புகாரின் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் ஈரோடு ரயில் நிலையத்தில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். நடைமேடை, இருப்பு பாதை, மற்றும் ஈரோடு வழியாக செல்லும் ரயில்களில் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், பயணிகளை சோதனை செய்ததோடு, அவர்களது உடைமைகளையும் மெட்டல் டிடெக்டர் உதவியுடன் நீண்ட நேரமாக சோதனை செய்தனர்.

 

Related Posts