ஈரோட்டில்  தேர்தலில் பொதுமக்களுக்குத்  பாதுகாப்பை உறுதி செய்ய காவல்துறையினரின் அணிவகுப்பு 

தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 18 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்கவும், பொதுமக்களுக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்யவும் காவல்துறையினரின்  அணிவகுப்பு   கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்றது.  நாயக்கன்காடு பகுதியிலிருந்து தொடங்கிய  இந்த  அணிவகுப்பு ஊர்வலமானது   புதுப்பாளையம் பேருந்திலையம், கச்சேரிமேடு வழியாகச் சென்று சாந்தி திரையரங்கில் நிறைவடைந்தது. இதில் கோபி உட்கோட்ட காவல் துணைக்கண்காணிப்பாளர் கிருஷ்ணசாமி, உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Posts