ஈழத் தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் கண்ணீர் சிந்த கூட அதிமுக அரசு அனுமதிக்கவில்லை

ஈழத் தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் கண்ணீர் சிந்த கூட அதிமுக அரசு அனுமதிக்கவில்லை என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

            கடந்த மே மாதம்,  சென்னை, மெரினா கடற்கரையில் மே 17-இயக்கம் சார்பில் நடைபெற்ற ஈழத் தமிழர்களுக்கான நினைவேந்தல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ,மே-17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீது. சட்ட விரோதமாக கூடியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ்  திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.. இந்த வழக்கு சென்னை எழும்பூர் பெருநகர குற்றவியல் நடுவர் மன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் ஆஜரானார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி,விசாரணையை அடுத்த மாதம் 10ந் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த வைகோ, ஆண்டுதோறும் மே மூன்றாம் வாரத்தில் ஈழத்தில் தமிழர் படுகொலை செய்யப்பட்ட  நாளான்று சென்னை மெரினாவில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்று வருவாதாக தெரிவித்தார். இந்த ஆண்டும் மே மாதம் நினைவேந்தல் மற்றும்  பேரணி நடத்தியதற்காக தன் மீதும் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் மீதும் காவல்துறை வழக்கு பதிவு செய்ததாகவும் கூறினார், ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழர்களுக்கு மெரினா கடற்கரையில் கண்ணீர் சிந்த கூட அதிமுக அரசு அனுமதிக்கவில்லை என அவர் வேதனை தெரிவித்தார்.ஸ்டர்லைட் போராட்டத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்கினால் போன உயிர் வந்துவிடுமா என்று கேளவி எழுப்பிய வைகோ,ஸ்டர்லைட்க்கு எதிராக போராடியவர்களை சுட்டுகொல்லப்பட்ட மே 22 ந் தேதி, கருப்பு நாள் எனவும் காவல்துறையின் போக்கை வன்மையாக கண்டிப்பதாகவும் கூறினார்.

Related Posts