ஈழத் தமிழ் இன அழிப்பு  குறித்து ஐநா நீதி விசாரணை நடத்தக் கோரி நாடாளுமன்றத்தில் கனடா தீர்மானம்-மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வரவேற்பு

Want create site? Find Free WordPress Themes and plugins.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஈழத் தமிழ் இன அழிப்புக்கு ஐ.நா. நீதி விசாரணை செய்ய வேண்டும் எனக்கோரி, கனடா நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தீர்மானம், ஒருமித்த ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும்,  அந்தத் தீர்மானத்தில், வன்முறையாலும், போராலும் பாதிக்கப்பட்ட இலங்கை வாழ் மக்களுக்கு இரங்கலைத் தெரிவித்து இருப்பதுடன், மதச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்குமாறும், அனைத்து மத வழிபாட்டுத் தலங்களையும் பாதுகாக்குமாறும் இலங்கை அரசைக் கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். ஐ.நா. மனித உரிமைகள் மன்றத்தின் 30 -ல் ஒன்று  மற்றும் 40-ல் ஒன்றுஆகிய தீர்மானங்களின்படி, தெளிவான கால அட்டவணை வகுத்துச் செயல்படுமாறு, இலங்கையிடம் கனடா அரசு முன்பு விடுத்த கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். .

இலங்கையில் தமிழர்கள் மீதான இனப்படுகொலைத் தாக்குதல், 2009 ஆம் ஆண்டில் இறுதிக் கட்டப் போர் குறித்தும் விசாரணை செய்வதற்கு, சுதந்திரமான பன்னாட்டு விசாரணை அமைப்பு ஒன்றை அமைக்குமாறு, கனடா நாடாளுமன்றம், ஐக்கிய நாடுகள் சபைக்குக் கோரிக்கை விடுத்து இருப்பதாகவும்,

கனடா நாடாளுமன்றம் நிறைவேற்றி இருக்கின்ற இந்தத் தீர்மானம், ஈழத்தமிழர் படுகொலைக்கு உரிய நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். .

கனடா அரசுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், மதிமுக சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதுடன், இந்தப் பிரச்சினையில் உரிய நீதி கிடைப்பதற்கhன முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வதாகவும் அந்த அறிக்கையில் வைகோ தெரிவித்துள்ளார்.

Did you find apk for android? You can find new Free Android Games and apps.

Related Posts