உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை

உசிலம்பட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் சார்பதிவாளர் அலுவலகத்தில் அதிகமாக லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் 32 ஆவணங்கள் சிக்கியுள்ளதாகவும்,  கணக்கில் வராத 67ஆயிரம் ரூபாய் பணம் சிக்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.  இதில் மேலும் முக்கிய ஆவணங்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாகவும்  அதிகாரிகள் கூறி வருகின்றனர். ஆண்டிபட்டி சேர்ந்த ஆனந்தன் என்பவர் பொறுப்பு பத்திரப்பதிவு அலுவலராக ஒரு மாதமாக பணியாற்றி வரும் நிலையில், அவர்  அதிகம் லஞ்சம் வாங்கி வருவதாக வந்த தகவலின் பெயரில் லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.  தற்போது வரை ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில்,இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Related Posts