உசிலம்பட்டி தொகுதியில் இரண்டு கால்நடை மருத்துவமனைகள் திறப்பு

உசிலம்பட்டி தொகுதியில் இரண்டு கால்நடை மருத்துவமனைகள் திறக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கொடிக்குளம், அய்யனார்குளம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் இரண்டாயிரத்து 500 குடும்பங்களுக்கு மேல் வசித்து வருகின்றன. அப்பகுதி மக்கள் வளர்க்கும் ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க சுமார் ஐந்து கிலோமீட்டர் தூரம் செல்ல வேண்டியிருப்பதாக கிராம மக்கள் கூறுகின்றனர். இதனையடுத்து தமிழக அரசின் உத்தரவின் படி கொடிக்குளம், அய்யனார்குளம் ஆகிய இரு கிராமங்களில் கால்நடை மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. இவற்றை சட்டமன்ற உறுப்பினர் நீதிபதி திறந்து வைத்தார்.

Related Posts