உசிலம்பட்டி மார்க்கெட்டில் மல்லிகைப்பூ விலை சரிவு

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு உசிலம்பட்டி பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூவின் விலை வெகுவாக சரிந்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளான  வகுரணி, சந்தைப்பட்டி, கல்லூத்து, செட்டியபட்டி போன்ற பகுதிகளில் மல்லிகைப் பூ அதிகளவு சாகுபடி செயப்படுகிறது. இந்நிலையில் தமிழகம் முழுவதும் நாளை விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படும் நிலையில் உசிலம்பட்டி பூமார்க்கெட்டில் பூவின் விலை கடுமையாக சரிந்துள்ளது. மல்லிகைப் பூ ஒரு கிலோ 500 ரூபாய்க்கும், பிச்சி பூ 300 ரூபாய்க்கும், செவ்வந்திபூ 80ரூபாய்க்கும் விற்பனை செய்யபடுவதால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். இதனையடுத்து மல்லிகைப்பூ சென்ட் ஃபேக்டரி அமைக்க தமிழக அரசுக்கு பூ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts