உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் இலங்கையில் புதிய பிரதமராக சபாநாயகர் கரு ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல்

உச்சக்கட்ட அரசியல் குழப்பம் நிலவி வரும் இலங்கையில் புதிய பிரதமராக சபாநாயகர் கரு ஜெயசூர்யா தேர்வு செய்யப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

ரணிலை மீண்டும் பிரதமராக நியமிக்கப் போவதில்லை என அதிபர் சிறிசேனா திட்டவட்டமாக கூறியுள்ளார். ஆனால், நாடாளுமன்றத்தில் மஹிந்த ராஜபக்சவை விட ரணிலுக்கு தான் பெரும்பான்மை எம்.பி-க்களின் ஆதரவு உள்ளது. இதனால், புதிய பிரதமரை உடனடியாக நியமிக்கும் நெருக்கடி நிலைக்கு சிறிசேனா தள்ளப்பட்டுள்ளார்.

இந்த நிலையில், இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் கரு ஜெயசூர்யா புதிய பிரதமராக நியமிக்கப்பட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வரும் திங்கட்கிழமையன்று புதிய பிரதமரை அதிபர் மைத்திரிபால சிறிசேனா நியமிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Related Posts