உச்சநிதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது

சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழைய அனுமதி அளித்து உச்சநிதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கது என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியுள்ளார்.

          சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களையும்  பாகுபாடு இல்லாமல் அனுமதிக்க வேண்டும் என உச்சந்நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலும் வரவேற்றும் விமர்சித்தும் கருத்து தெரிவிக்கப்பட்டு வருகிறது. தீர்ப்பு குறித்து தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், ஆணும் பெண்ணும் சரிநிகர் சமம்’ என்பதை நிரூபிக்கும் வகையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பு வரலாற்றுச் சிறப்புமிக்கது என கூறியுள்ளார்.. சமூக நீதி-பாலின சமத்துவம்-பெண் விடுதலை ஆகிய உயர்ந்த தத்துவங்களை நோக்கிய பயணத்தில் இத்தீர்ப்பு ஒரு மைல்கல் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.  இதேபோல் தீர்ப்பை வரவேற்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஆதினம்,

         இந்த தீர்ப்பின் மூலம்  பெண்கள் கடவுளாக வழிபடக்கூடியவர்கள் என்பதும், ஆண்களும், பெண்களும் சம உரிமை பெற்றவர்கள் என்பதும் நிரூபணமாகி உள்ளதாக கூறினார்.. எனவே பெண்களை அனைவரும் மதிக்க வேண்டும் எனவும், இந்த தீர்ப்புக்கு கேரள அரசும், தேவசம் போர்டும் முழுமையாக ஒத்துழைக்க வேண்டும் எனவும் மதுரை ஆதினம் தெரிவித்தார்..

         மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில், ஒரு குறிப்பிட்ட பாலினம் அல்லது சமூகத்துக்கு மட்டுமே இந்து மதம் என்ற தடை அகற்றப்பட்டு, இந்துத்துவம் ஒரு ஜாதிக்கானது அல்ல என்பதை சபரிமலை தீர்ப்பு நிரூபித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Posts