உச்சநீதிமன்றத்தில் வரைவுத்திட்ட அறிக்கையை தாக்கல் செய்தது மத்திய அரசு

காவிரி நதிநீர் பங்கீடு வழக்கில்நீண்ட இழுபறிக்கு பிறகு உச்ச நீதிமன்றத்தில் வரைவுத்திட்ட அறிக்கையைமத்திய அரசு இன்று தாக்கல் செய்தது. அந்த அறிக்கையில் 10 பேர் கொண்ட குழு அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

டெல்லி : மே-14

காவிரி நீர் பங்கீடு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்நடுவர் மன்ற தீர்ப்பை செயல்படுத்த 6 வாரங்களுக்குள் ஸ்கீம்  ஒன்றை ஏற்படுத்துமாறு கடந்த பிப்ரவரி 16-ந் தேதி மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.  ஆனால்வரைவு செயல்திட்டத்தை மத்திய அரசு தாக்கல் செய்யாமல்கடைசி நாளில் ஸ்கீம்’ என்றால் என்ன என்று விளக்கம் கேட்டு மனுத்தாக்கல் செய்தது. இதனால்உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாத மத்திய அரசுக்கு எதிராக தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.  இந்த மனுக்கள் கடந்த முறை விசாரணைக்கு வந்தபோதுகாவிரி தீர்ப்பை செயல்படுத்தாத மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்த நீதிபதிகள்இன்று வரைவுத் திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என கண்டிப்புடன் உத்தரவிட்டனர். அதன்படிஇன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோதுதலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்னிலையில்மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் நேரில் ஆஜராகிசீலிடப்பட்ட கவரில்காவிரி வரைவு செயல்திட்டத்தை தாக்கல் செய்தார். அப்போது,காவிரி நடுவர் மன்றம் கூறிய பணிகளை காவிரி அமைப்பு மேற்கொள்ளும் என்று யு.பி.சிங் தெரிவித்தார். காவிரி நதிநீர் பங்கீட்டுக்கு, 10 பேர் கொண்ட அமைப்பை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும்தமிழகம் உள்ளிட்ட 4 மாநிலங்களில் இருந்து ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் ஒரு உறுப்பினர் காவிரி அமைப்பில் இடம்பெறுவர் என்றும் யு.பி.சிங் கூறினார். ஒரு நிரந்தர உறுப்பினர், 2 பகுதி நேர உறுப்பினர்கள் காவிரி தொடர்பாக அமைக்கப்படவுள்ள குழுவில் இடம்பெறுவார்கள் என்றும்யு.பி.சிங் தெரிவித்தார். கர்நாடகாவில் சனிக்கிழமை தேர்தல் முடிந்த நிலையில் இன்று வரைவுத் திட்டம் உச்சநீதிமன்றத்தில் தாக்கலாகியுள்ளது.  வரைவுத் திட்டம் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து வழக்கு விசாரணை மே 16ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. வரைவு திட்டத்தில் உள்ள அம்சங்கள் குறித்து ஆய்வு செய்த பிறகு அதன் விவரங்களை மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் தெரிவிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Posts