உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை நீக்கக்கோரி காங்கிரஸ் எம்.பி-க்கள் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

 

 

தலைமை நீதிபதியை நீக்குவது தொடர்பாக காங்கிரஸ் கட்சி எம்.பி-க்கள் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிரான கண்டனத் தீர்மான நோட்டீசை காங்கிரஸ். உள்ளிட்ட 7 கட்சிகளின் எம்.பி.க்கள் மாநிலங்களவை தலைவரிடம் அளித்தனர். ஆனால் இந்த நோட்டீசை மாநிலங்களவை தலைவர் வெங்கையாநாயுடு நிராகரித்து விட்டார். இதை எதிர்த்து மாநிலங்களவை காங்கிரஸ் உறுப்பினர்களான பிரதாப் சிங், மற்றும் அமீ ஹர்ஷத்ராய் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். போதிய உறுப்பினர்கள் கையெழுத்திட்ட போதும் கண்டன தீர்மான நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மனுவில் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த வழக்கு நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையில், நீதிபதிகள் பாப்டே, ரமணா, அருண்  மிஸ்ரா, ஏ.கே.கோயல் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்தது. இவ்வழக்கை விசாரிக்க 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு எப்படி உருவானது என்ற விவரத்தை மனுதாரர் தரப்பில் வாதிட்ட கபில் சிபல் கேட்டார். கேள்விக்கு நீதிபதிகள் பதில் சொல்லாத காரணத்தால் மனுவை கபில் சிபல் பெற்றார். இதையடுத்து வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது

Related Posts