உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார் கூறிய மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் ஓய்வு

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மீது பரபரப்பு புகார் கூறிய மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர் இன்றுடன் ஓய்வு பெறவுள்ளார்.

டெல்லி : ஜூன்-22

உச்சநீதிமன்ற மூத்த நீதிபதியான செல்லமேஸ்வர், பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்துள்ளார். கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக, மூத்த நீதிபதி செல்லமேஸ்வர் உட்பட 4 நீதிபதிகள் போர்க்கொடி தூக்கினர். வழக்குகள் ஒதுக்கப்படுவதில் பாரபட்சம் காட்டப்படுவதாக தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது அவர்கள் நால்வரும் புகார் தெரிவித்திருந்தனர். உச்சநீதிமன்ற மூத்த நீதிபதிகள் முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்து பேசியது, பெரும் பரபரப்பையும் விவாதங்களையும் எழுப்பியது. அந்த செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய செல்லமேஸ்வர், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை காக்க வலியுறுத்தினார்.இந்நிலையில், கடந்த ஏழு ஆண்டுகளாக உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய செல்லமேஸ்வர், இன்று தமது 65வது பிறந்த நாளில் ஓய்வு பெறவுள்ளார்.  

Related Posts